Thursday, March 25, 2010

மர ஓம்

மேகம் அணைக்க
மரக்கைகள் நீட்டும்
பூமி

தாவிப்பிடிக்க முடியாமல்
தவிக்கும் மரங்கள்

மனமிரங்கி
வானமிறங்கி
முத்த மழை
முழுதாய் தழுவும்

இது அறிந்தும்

மரம் வெட்டி
சந்ததிக்கும் சேர்த்து
சவப்பெட்டி செய்யும்
மனிதன்

                                                         மர ஓம்   !

1 comment: